சிரம்பான்:

5 பெரிக்காத்தான் நேஷ்னல் (PN) சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கத் தேவையான பெரும்பான்மை தங்களுக்கு இருப்பதாக, நெகிரி செம்பிலான் தேசிய முன்னணி (BN) அறிவித்துள்ளது.

முன்னதாக, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணுக்கு வழங்கிய ஆதரவை 14 BN சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக்கொண்டனர்.

மாநில நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டும் அரசாங்கம் தொடர்ந்து மக்களுக்கு செயலாற்றவும், கட்சி வேறுபாடுகளைத் தவிர்த்து ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.