ஷா அலாம்:

குரு ஸ்ரீமதி நா. விக்னேஸ்வரி சந்திரமோகனை ஆசிரியராகக் கொண்ட அபிநயா சேத்ரா நுண்கலாலய மாணவிகளின் ‘சிலம்பொலி 7’ ஷா ஆலம், புக்கிட் கெமுனிங் டாமாய் எம்பிஎஸ்ஏ மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது.

ஸ்ரீமதி காயத்ரி சி. ரமேஷ் சிறப்பு வருகை புரிந்த இந்நிகழ்ச்சியில் ஐயனேஸ்வரி, ஜெசித்ரா, ஜஸ்மித்ராலஹரி, தானியலஹரி, மஹினாலஹரி, ரேஷினி, ரியா ரெத்திகா மற்றும் வினோஷா ஸ்ரீ ஆகிய நடனமணிகள் நடனம் புரிந்தனர்.

அவர்களின் படைப்பு, வருகை புரிந்தவர்களுக்கு நல்ல கலை விருந்தைப் படைத்தது என்றால் மிகையாகா.