பெட்டாலிங் ஜெயா:
பிஜேஎஸ் 7/13, பண்டார் சன்வே ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் நீண்ட கால நிலப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டிருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார்.
இதற்காக மாநில சட்டமன்ற கூட்டத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷால் எங் மெய் சீக்கை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
அதே வேளையில், சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் செனுக்கும் அவர் நன்றி கூறினார்.
இப்பிரச்னைக்குத் தீர்வு காண தொடக்க காலத்தில் கடும் முயற்சிகளை முன்னெடுத்த மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார், முன்னாள் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா ஹியோ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஆலய சித்திரை பௌர்ணமி திருவிழாவில் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
டத்தோ ஆர்.மணிவாசகம் நிர்வாகத்தின் கீழ் ஆலயம் சிறப்பாக செயல்பட்டு வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
பண்டார் சன்வே ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் மேம்பாட்டிற்காக பாப்பாராய்டு, மிஷால் எங் மற்றும் வோங் சென் ஆகியோர் தலா 10,000 வெள்ளி மான்யம் வழங்கினர்.

