கோலாலம்பூர்:

தமிழ், சீனம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒலிபரப்பாகும் வானொலி நிலையங்கள் உட்பட அனைத்து வானொலிகளிலும் வெளிநாட்டு பாடல்களை விட உள்ளூர் பாடல்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கும் வழிமுறைகளை அரசு தீவிரமாக ஆய்வு செய்யும் என தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் திறமையான கலைஞர்களும் தரமான இசைப் படைப்புகளும் அதிகம் இருப்பதாக அவர் கூறினார். உள்ளூர் இசைத்துறையை வலுப்படுத்த கலைஞர்களுக்கான மானியங்கள், R!UH போன்ற நிகழ்வுகள் மற்றும் பல்வேறு ஆதரவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“படைப்புகள் உருவாக்கம், ஒலிபரப்பு, விளம்பரம் மற்றும் கலைஞர்களுக்கான தொடர்ச்சியான ஆதரவு ஆகியவை ஒருங்கிணைந்தால்தான் உள்ளூர் இசைத்துறை மேலும் வளர்ச்சி பெறும்,” என அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக, (MINDRAA) பிரதிநிதிகளுடன் அங்க்காசாபுரியில் நடைபெற்ற சந்திப்பில் உள்ளூர் இசைக்கான வாய்ப்புகள் மற்றும் வானொலிகளில் வழங்கப்பட வேண்டிய ஆதரவு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஃபாமி ஃபாட்ஸில் கூறினார்.