தைப்பிங், ஜூலை 28-
தைப்பிங், துப்பாய் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின்சுடலை மையம் சரியான முறையில் சட்டவிதியின்படி கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடம் கட்டுவதில் எந்தவொரு முறைகேடுகளும் நடக்கவில்லை என்று ஆலய நிர்வாகத்தினர்கள் திட்டவட்டமாக தெரிவிப்பதாக அதன் செயலாளர் மா.மணிவண்ணன் கூறினார். பலமுறை தமிழ் நாளிதழ்களில் இச்செய்தி வெளியாகியுள்ளது. சிலர் வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்பி மக்களை குழப்பி தங்களையும் குழப்பிக் கொள்வதாக தனது...