Homeஇந்தியா/ ஈழம்

இந்தியா/ ஈழம்

இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு பணம் செலுத்துவது இனி எளிதாகும்

கோலாலம்பூர்: இந்தியா செல்லும் மலேசியர்கள் அங்கு பணம் செலுத்துவதை மேலும் எளிதாக்கும் வகையில், மலேசியாவின் DuitNow QR மற்றும் இந்தியாவின் UPI கட்டண முறைகளை இணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்தியாவில் உள்ள கடைகளின் UPI QR குறியீட்டை ஸ்கேன் செய்து மலேசியர்கள் நேரடியாக பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தேசிய கட்டண அமைப்பான National Payments...

இந்தியா செல்லும் மலேசியர்களுக்கு ‘மின் வருகை அட்டை’ கட்டாயம்: இந்திய தூதரகம் அறிவிப்பு

புது டெல்லி: இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் மலேசிய குடிமக்கள் அனைவரும், தங்களது பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே 'மின் வருகை அட்டை' (e-Arrival Card) விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயம் என்று புது டெல்லியில் உள்ள மலேசிய தூதரகம் அறிவித்துள்ளது. மலேசியத் தூதரகம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள இந்த புதிய பயண ஆலோசனையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: சாதாரண மலேசியக் குடிமக்கள் மற்றும்...

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

ஈரான்: ஈரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்ததால், அனைத்துலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 88 டாலராகக் (ரிம 347) குறைந்தது. அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து இந்த முக்கிய வர்த்தகப் பாதை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்த பாதையைத் திறக்கும் முடிவை அதிபர் டொனால்ட்...

மூடநம்பிக்கை கொடூரம்: கங்கை நதியில் 12 மணிநேரம் மூழ்கடிக்கப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

உத்தரபிரதேசம்: பாம்பு கடித்த 13 வயது சிறுவனை, அவனது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு, மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு, பாரம்பரிய சிகிச்சை என்ற பெயரில் கங்கை நதியில் 12 மணிநேரம் கட்டி வைத்தனர். ஆற்றில் மூழ்கடிக்கப்பட்ட அந்த சிறுவன், இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். இச்சம்பவம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிருக்கு ஆபத்தான மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க...

ஒரே சிரிஞ்சை பயன்படுத்தி ஊசி; 331 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி!

டான்சா: பாகிஸ்தானின் டான்சா அரசு மருத்துவமனையில் சுத்தமற்ற ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளானது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. 2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரை இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பற்ற மருத்துவ நடைமுறைகள் காரணமாக இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பதற்றம் அதிகரிப்பு: ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டது!

ஈரான்: லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்து புதன்கிழமை மாலை முழுமையாக நிறுத்தப்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதால், அந்நாட்டின் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் நிபந்தனைகளை மீறி லெபனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதையில் மீண்டும் முடக்கம் ஏற்பட்டுள்ளது.