Homeசமூகம்

சமூகம்

தமிழ்/தமிழர் இன அடையாளத்தைப் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யக் கோரிக்கை

கோலாலம்பூர்: மலேசியப் பிறப்புச் சான்றிதழ்களில் தமிழர்களின் இன அடையாளத்தை ‘தமிழ்’ அல்லது ‘தமிழர்’ எனத் தனியாகப் பதிவு செய்யும் வகையில் மலேசியப் பதிவுத்துறை அனுமதி வழங்க வேண்டும் என மலேசியத் தமிழர் தேசியப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, வரும் அக்டோபர் 11ஆம் தேதி https://www.tiktok.com/@anegunnews/video/7690119280339275060?is_from_webapp=1&sender_device=pc&web_id=7672254420125812240 காலை 7.30 மணி முதல் மாலை 3 மணி வரை சா ஆலாம், சிலாங்கூரில் ‘நாங்கள் தமிழர்’ என்ற கருப்பொருளில்...

ரோக்கி கொலை; விலங்குகள் மீதான துன்புறுத்தலுக்கு இஸ்லாத்தில் இடமில்லை: ஷெர்லீனா கண்டனம்

புக்கிட் பெண்டேரா: ரோக்கி என்றழைப்பட்ட செல்லப்பிராணி நாய் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷீத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், விலங்குகள் மீதான துன்புறுத்தலுக்கு இஸ்லாத்தில் இடமில்லை என்றும், சட்டத்தை கையில் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு யாருக்கும் அதிகாரமில்லை என்றும் தெரிவித்துள்ளார். ரோக்கி ஒரு தெருநாய் அல்ல; அது ஒரு குடும்பத்தின் அன்புக்குரிய செல்லப்பிராணி என்றும், இந்தச் சம்பவம் ஒரு...

சுங்கை பூலோ சமூக, பள்ளி மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் 6 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர்: சுங்கை பூலோ பகுதியில் 'மடானி தத்தெடுக்கப்பட்ட கிராமம்' (Program Kampung Angkat Madani) மற்றும் 'மடானி தத்தெடுக்கப்பட்ட பள்ளி' (Program Sekolah Angkat) ஆகிய திட்டங்களை அமல்படுத்துவதற்காக நிதியமைச்சு வாயிலாக மடானி அரசாங்கம் 6 லட்சம் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டங்கள் முறையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்தப்படுவதை மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு (மித்ரா) ஒருங்கிணைத்து கண்காணிக்கும். இது குறித்து மித்ரா தலைமை...

தேசிய அளவிலான 10 ஆவது செந்தமிழ் விழா; பேராக்கில் கோலாகலமாக தொடங்கியது!

தைப்பிங்: தேசிய அளவிலான 10 ஆவது செந்தமிழ் விழா பேரா, தைப்பிங்கில் உள்ள கிராண்ட் பாரோங் தங்கும் விடுதியில் நேற்று புதன் கிழமை கோலாகலமாக தொடங்கியது. மூன்று நாள் டைபெறும் இப்போட்டியை பேரா ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தொடக்கி வைத்தார். அதன் நிறைவு விழா நாளை  வெள்ளிக்கிழமை நடைபெறும்.அதில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ...

பேராக் பணி ஓய்வு பெற்ற போலிஸ் உறுப்பினர் சங்கம் சொந்த அலுவலகக் கட்டடத்தை வாங்கியது!

ஈப்போ: நாட்டின் பாதுகாப்பு படையில் சேவையாற்றி வரும் போலீஸ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பணி ஓய்வு பெற்ற போதிலும் சமுகத்திற்கு தங்களின் சேவை தொடரவேண்டும் என்ற நோக்கத்தில் பேராக் மாநில மக்களுக்கான சமூகப் பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுக்கும் நோக்கில், பேராக் மாநில போலீஸ் பணி ஓய்வு பெற்ற சங்கம் அமைக்கபட்டது. இன்று அது அதன் சேவையை மேலும் விரிவாக்க 230,000 ரிங்கிட் செலவில் தனது...

சுங்கை சிப்புட் இந்திய முஸ்லிம் பள்ளிவாசலில் அஷூரா கஞ்சி விநியோகம்

சுங்கை சிப்புட்: பல்வேறு இன, மத மக்களை ஒரே இடத்தில் ஒன்றிணைத்து, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் சுங்கை சிப்புட் இந்திய முஸ்லிம் பள்ளிவாசல் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த அஷூரா கஞ்சி சமைக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. கடந்த எட்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி, மத வேறுபாடுகளைத் தாண்டி மனிதநேயத்தையும், சகோதரத்துவ உணர்வையும் வலுப்படுத்தும் சமூக நிகழ்வாக...