https://www.tiktok.com/@anegunnews/video/7689480702429039893?is_from_webapp=1&sender_device=pc
கோலாலம்பூர்:
ஆய்வு மற்றும் புத்தாக்கங்கள் நோயாளிகளுக்குச் சிறந்த பலன்களை வழங்கக்கூடிய நடைமுறைத் தீர்வுகளாக மாற வேண்டும் என அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் டத்தோ சாங் லிஹ் காங் தெரிவித்தார்.
காயப் பராமரிப்பை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், காயத்துக்குச் சிகிச்சையளிப்பது மட்டுமின்றி, நோய்த் தடுப்பு, ஆரம்பகட்ட நடவடிக்கை, நோயறிதல், மருத்துவப் பராமரிப்பு, மறுவாழ்வு, நோயாளிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் நீண்டகால வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும்...
கோலாலம்பூர்:
போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மலேசியாவும் சீனாவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான விரிவான கட்டமைப்பை இந்த ஒப்பந்தம் உருவாக்குகிறது. இதில் சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, கடல்வழிப் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இத்துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்வதற்கும், பணியாளர்களின் திறன்களை...
கிள்ளான்:
பண்டார் உத்தாமாவில் 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம், குழந்தைகள் மற்றும் இளம் வயதினரிடையே காணப்படும் தீவிரமான மனநலப் பிரச்சினைகளின் ஆரம்ப அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிந்து, உரிய தலையீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக அவர் கூறினார்.
உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தடயவியல் மனநல மருத்துவ ஆதாரங்களின்படி, சம்பந்தப்பட்ட...
கோலாலம்பூர்: இந்தியா செல்லும் மலேசியர்கள் அங்கு பணம் செலுத்துவதை மேலும் எளிதாக்கும் வகையில், மலேசியாவின் DuitNow QR மற்றும் இந்தியாவின் UPI கட்டண முறைகளை இணைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம், இந்தியாவில் உள்ள கடைகளின் UPI QR குறியீட்டை ஸ்கேன் செய்து மலேசியர்கள் நேரடியாக பணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் தேசிய கட்டண அமைப்பான National Payments...
ஈப்போ: திங்கட்கிழமை கம்போங் தாகுங், போஸ் பெர்வோர் அருகிலுள்ள வனப்பகுதியில் பிரம்பு தேடச் சென்ற 42 வயதுடைய பழங்குடி ஆடவர் புலி தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
உயிரிழந்தவர் ஸாம்பெரி அங்கா, 42 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஹூத்தான் சிம்பான் கோர்பு வனப்பகுதிக்குள் நண்பர் ஒருவருடன் பிரம்பு தேடச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக நம்பப்படுகிறது.
பின்னர், சம்பவம் இடம்பெற்றதாகக் கருதப்படும் இடத்திலிருந்து சுமார் 200...
கோலாலம்பூர்:
மாறிவரும் தற்கால வேலைவாய்ப்புச் சூழலுக்கு ஏற்ப, மலேசியாவும் சிங்கப்பூரும் தொழிலாளர் துறையிலான தங்களின் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் என்றும், குறிப்பாக கிக் தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த இணைந்து செயல்படும் என்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூருக்கு அதிகாரப்பூர்வ பணி விஜயம் மேற்கொண்ட அவர், அந்நாட்டின் மனிதவள இடைக்கால அமைச்சர் ஜாஸ்மின் லாவ் உடன் நடத்திய சந்திப்பில்...