Homeமலேசியாதே.மு.வின் புதிய இணையத்தள பதிவேடு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை! ஆய்வாளர் கருத்து

தே.மு.வின் புதிய இணையத்தள பதிவேடு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை! ஆய்வாளர் கருத்து

பெட்டாலிங் ஜெயா, ஏப். 2-
அண்மையில் தேசிய முன்னணி அறிமுகப்படுத்திய அதன் இணையத்தள செய்தி பதிவேடு வருகின்ற 14ஆவது பொதுத்தேர்தலில் மக்களின் ஆதரவுகளைப் பெருவதில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் பைசால் எஸ் ஹாசிஸ் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 80 விழுக்காடு வாக்காளர்கள் எந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டதாகவும் டாக்டர் பைசால் கூறினார்.

14ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்னராக உருவாக்கப்பட்டுள்ள அந்த பதிவேடு உண்மையில் அதன் தாக்கத்திற்கு தடையாக உள்ளது. தேசிய முன்னணி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த விரும்பினால் அக்கூட்டணி முன்பே அதனை தொடங்கியிருக்க வேண்டும். தேசிய முன்னணியின் சாதனைகளை தெரியப்படுத்தவும் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் நோக்கிலும் இவ்வாண்டு அக்கூட்டணி தனது இரண்டாவது அரசியல் இணையத்தள செய்தி பதிவேட்டை அறிமுகப்படுத்தியது குறித்து கருத்துரைக்கையில் டாக்டர் பைசால் மேற்கண்டவாறு சொன்னார்.

barisannasional.org.my எனும் தேசிய முன்னணியின் அகப்பக்கத்தில் ஒவ்வொரு மாநிலங்களிலும் அக்கூட்டணியின் சட்டமன்ற கொள்கைகள், நடப்பு அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள மேம்பாட்டு திட்டங்கள் பற்றிய தகவல்கள் உள்ளது. அதுமட்டுமின்றி, உடல் ஆரோக்கியம், கல்வி, போக்குவரத்து, பொது பாதுகாப்பு, நிர்வாகம், நகர்புற மற்றும் புறநகர் மேம்பாடு உள்ளிட்டவைகள் குறித்து தேசிய முன்னணி அளித்த வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரதமரும் தேசிய முன்னணியின் தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கடந்த ஜனவரி மாதம் பொதுத்தேர்தல் தொடர்பான விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய டெராக்யாட்.கோம் எனும் இணையத்தள செய்தி பதிவேட்டை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

இந்த இணையத்தள செய்தி பதிவேடு எதிர்கட்சிகளைக் காட்டிலும் மக்களுக்கு செய்திகளை வழங்குவதில் பலவீனத்தைக் கொண்டிருப்பதாக பைசால் குறிப்பிட்டார். மலேசியாவில் எதிர்கட்சிகள் தேசிய ஊடகங்களைக் கொண்டிருக்கவில்லை. கடந்த 2 பொதுத்தேர்தல்களில் சமூகவலைத்தளங்களைத் தான் அவை சார்ந்து இருந்தன. தேசிய முன்னணி முடிந்த அளவிலான தகவல் தளங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், இறுதியில் அகப்பக்கங்கள் முக்கியமற்றதாக இருக்கும். காரணம், இப்பொழுது தகவல்கள் முகநூல், டுவீட்டர், இன்ஸ்தாகிராம் ஆகியவை வாயிலாக பகிரப்படுகின்றது.

இப்பொழுது பொதுமக்கள் வலைத்தளங்களை அதிகம் பார்வையிடுவதில்லை. மாறாக, சமூகவலைத்தளங்களைக் கொண்டிருக்கும் வலைத்தளங்களை மாற்று செய்தி தளங்களாக பார்வையிடுகின்றனர். அதனால், தேசிய முன்னணி ஏற்படுத்தியுள்ள இணையத்தள செய்தி பதிவேடு மிகப் பெரிய தாக்கத்தை வழங்காது என்பதற்கு இது ஒரு காரணமாக இருப்பதாக பைசால் கூறினார்.

spot_img

latest articles

explore more