Homeமலேசியாதே.மு. விளம்பரம் தேடும் அரசாங்கம் அல்ல! -பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்

தே.மு. விளம்பரம் தேடும் அரசாங்கம் அல்ல! -பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்

கோலாலம்பூர், ஆக. 8-

     தேசிய முன்னணி அரசாங்கம் மக்களின் ஆதரவை பெறுவதற்காக வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் விளம்பரம் தேடும் அரசாங்கம் அல்ல என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்தார்.

     மாறாக, நான் வழிநடத்திவரும் அரசாங்கம் நியாயமானதாகவும்  நாட்டை வளமான எதிர்காலத்தை நோக்கி கொண்டு செல்லும் அரசாங்கமாகவும் திகழ்வதாக அவர் கூறினார்.

     நாட்டிற்கு சிறந்தனவற்றை மேற்கொள்வதாக உறுதியளித்த அவர், நாட்டின் பிரதமர் எனும் அடிப்படையில் தனது பொறுப்பிலிருந்து ஒரு போதும் விலகி செல்ல மாட்டேன் என இன்று தேசிய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் பொருளாதார கருத்தரங்கில் கலந்துக்கொண்டு உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் குறிப்பிட்டார்.

     இக்கருத்தரங்கில் அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமட் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

spot_img

latest articles

explore more