Homeஅரசியல்தேசிய முன்னணியின் வெற்றிக்காக கிம்மா உழைக்கும் ! - டத்தோஸ்ரீ சையிட் இப்ராஹிம்

தேசிய முன்னணியின் வெற்றிக்காக கிம்மா உழைக்கும் ! – டத்தோஸ்ரீ சையிட் இப்ராஹிம்

செமினி, பிப் 15-

செமினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி செய்வதை உறுதி செய்யும் வகையில் கிம்மா தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடும் என அதன் தலைவர் டத்தோஸ்ரீ சையிட் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.

செமினி சட்டமன்றத்தை பொருத்தவரை 1157 வாக்காளர்கள் இந்திய முஸ்லிம்கள் ஆவர். அவர்களின் வாக்குகளை தேசிய முன்னணிக்கு கொண்டு வர நடவடிக்கை முன்னெடுக்கும் என அவர் தெரிவித்தார்.

தேசிய முன்னணி இந்திய சமுதாயத்திற்கான பல நல்ல திட்டங்களை தொடர்ந்து செய்து வந்தது. மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி பின்னடைவைச் சந்தித்தது. ஆனால் இப்பொழுது மீண்டும் மக்கள் தேசிய முன்னணி பக்கம் திரும்பி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது என கூறினார்.

இந்திய முஸ்லிம் சமுதாயத்தைப் பொறுத்தவரை தேசிய முன்னணி அரசாங்கம் பலதரப்பட்ட நலத்திட்டங்களை வழங்கியதோடு பலதரப்பட்ட சலுகைகளையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகையின் மூலம் மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயம் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொண்டது என்றால் அது மிகையாகாது.

மலேசிய இந்திய முஸ்லிம்கள் இன்னமும் தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் செமினி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 1157 வாக்காளர்களும் தேசிய முன்னணி வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் இப்ராகிம் கூறினார்.

வியாழக்கிழமை இரவு தேசிய முன்னணி வேட்பாளரை அதன் தலைவர் ஆசான் அறிமுகப்படுத்தினார். அந்த அதிகாரத்துவ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கிம்மா தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனவரி 11ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நோ மாரடைப்பு காரணமாக காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடக்கின்றது.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சார்பில் போட்டியிட்ட அவர் 23,428 வாக்குகளைப் பெற்றார்.
தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ ஜோஹான் அப்துல் அஸீஸ் 14 ,464 வாக்குகளைப் பெற்ற வேளையில் பாஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாட் ஷாமிடுர் 6,966 வாக்குகள் பெற்றார். பி எஸ் எம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அருள்செல்வம் சுப்பிரமணியத்திற்கு 1293 வாக்குகள் கிடைத்தன.

spot_img

latest articles

explore more