Homeகுற்றவியல்15 லட்சம் கையூட்டு: கருவூலத் துணை தலைமை அதிகாரி கைது!

15 லட்சம் கையூட்டு: கருவூலத் துணை தலைமை அதிகாரி கைது!

புத்ராஜெயா, பிப். 15-

குத்தகையை பெற்று தருவது தொடர்பாக ஒரு தனியார் நிறுவனத்திடம் 15 லட்சம் லஞ்சம் கேட்டது தொடர்பில் கருவூலத் துறை தலைமை அதிகாரியை ஐந்து நாட்கள் தடுத்து வைக்க மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணையம் அனுமதியைப் பெற்றுள்ளது.

புத்ராஜெயா மஜிஸ்திரிட் நீதிமன்றத்தில் மலேசிய தடுப்பு ஆணையம் முன்வைத்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி வரை கைது செய்யப்பட்ட அந்த பெண்மணிக்கு தடுப்புக்காவல் வழங்குவதாக நீதிபதி அமாட் ஹபிக் ஹசன் கூறினார்.

39 வயதான அந்த பெண்மணி இன்று காலை 9.05 மணியளவில் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார். அப்பொழுது அவரது கைகளில் விலங்கிடப்பட்டு இருந்தது.

அரசுக்கு சொந்தமான நிலத்தை ஹாங்காங் நிறுவனத்திடம் விற்பதற்கு கருவூல துணை செயலாளரின் கையெழுத்தை பெற்றுத் தருவதற்கு கூறி 15 லட்சம் வெள்ளி கையூட்டு கேட்டதாக அந்தமாதின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் இதர சில பேரும் கைது செய்யப்படலாம் என்ற தகவலை மலேசிய லஞ்சத்தடுப்பு ஆணையம் மறுக்கவில்லை. இந்த வழக்கு 2009 Section 16 லஞ்ச ஒழிப்பு பிரிவின் கீழ் விசாரிக்கப்படுகின்றது.

spot_img

latest articles

explore more