Homeஅரசியல்பெட்ரோல் விலை உயர்கிறது! டீசல் விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோல் விலை உயர்கிறது! டீசல் விலையில் மாற்றம் இல்லை

புத்ராஜெயா பிப்ரவரி 15-

சனிக்கிழமை தொடக்கம் ரோன் 95, 97 பெட்ரோல் விலை ஒரு காசு உயர்வு காண்கின்றது. ஆனால் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிதி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரோன் 95 பெட்ரோல் விலை ரிம.1.98 காசாகவும் ரோன் 97 பெட்ரோல் விலை ரி.ம. 2.28 காசாகவும் விற்கப்படும். இந்த இரண்டு பெட்ரோல் விலையும் ஒரு காசு உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் விலை ரிம. 2.18 காசாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

உலகச் சந்தையில் பெட்ரோல் விலை உயர்ந்தாலும் மலேசியாவில் ரோன் 95 பெட்ரோல் விலை ரிம. 2.20 காசாக நிலை நிறுத்தப்படும் என்ற வாக்குறுதியை அரசாங்கம் வழங்கியிருந்தது. அதேபோல் டீசல் விலையும் ரிம. 2.18 காசாக நிலை நிறுத்தப்படும் என்றும் அது கூறியிருந்தது.

பெட்ரோலுக்கான உதவி தொகை அறிவிக்கப்படும் வரை வாரத்திற்கு ஒரு முறை பெட்ரோல் விலை தொடர்ந்து அறிவிக்கப்படும் என்ற தகவலையும் நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

spot_img

latest articles

explore more