Homeகுற்றவியல்அடிப் மரண விசாரணை : "அடிக்காதீர்கள்'' என கதறினார்கள்! - சுரேஷ் சாட்சியம்

அடிப் மரண விசாரணை : “அடிக்காதீர்கள்” என கதறினார்கள்! – சுரேஷ் சாட்சியம்

கோலாலம்பூர், பிப். 15-

சிலாங்கூர் சுபாங் ஜெயா சிபீல்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தின் போது, முகமட் அடிப் மரமடைந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வருகின்றது, இந்நிலையில் இன்று சாட்சி ஒருவர் “அடிக்காதீர்கள்” என்று சிலர் கூச்சலிட்டது தமக்கு கேட்டதாக, சாட்சி ஒருவர் இன்று சாட்சியம் அளித்துள்ளார்.

அச்சமயத்தில், முகமட் அடிப் ஒரு காரின் மீது சாய்ந்திருந்ததையும் தாம் பார்த்ததாக குத்தகையாளர் எஸ். சுரேஷ் (வயது 33) கூறியுள்ளார். ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரர், முகமட் அடிப் முகமட் கசிமின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் விசாரணை, இன்று வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாக தொடர்ந்தது.

அதில் சாட்சியளித்த பொதுமக்களில் ஒருவரான சுரேஷ், காரின் மீது ஒருவர் சாய்ந்திருந்தபோது, அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் அடிக்க வேண்டாம் என்று கூச்சலிட்டதாக கூறினார்.

அச்சமயத்தில், அடையாளம் தெரியாத ஒருவரால் தள்ளப்பட்டு, தாம், அந்த தீயணைப்பு வீரர் மீது விழுந்ததாக, சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்த சுரேஷ் கூறினார்.

வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சின் வழக்கறிஞர் ஷாலின் மன்சோர் தீயணைப்புத் துறை மற்றும் அடிப்பின் குடும்பத்தினரின் வேண்டுக்கோளுக்கு இணங்க, தாம் விழுந்த விதத்தை, சுரேஷ் மீண்டும் நடித்துக் காட்டினார்.

அடிப் மீது விழுந்த போது, தமது வலது கை தரையைத் தாங்கியிருந்ததாகவும், இடது கை காரைப் பிடித்துக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். அவ்வேளையில், தமது தோள்பட்டையை அடையாளம் தெரியாத ஒருவர் உதைத்தாகவும், அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

அடிப் விபத்துக்குள்ளான விவகாரம் குறித்து அங்கு கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் பேசப்பட்டதா என்ற கேள்வி, அவர் இல்லை என்றும் பதிலளித்தார்.

அதோடு, அங்கு கூடிந்த மக்கள் கூறியதை அடிப்படையாகக் கொண்டு, தாம் தமது நண்பரான ஆர் நரேஷிடம், தீயணைப்பு வீரர் ஒருவரை தாக்கப்பட்டு விட்டதாக கூறியதாக அவர் கூறினார். அந்த தீயணைப்பு வீரரை தூக்கி வரும் போது, தீயணைப்பு வீரரையும் தாக்கலாமா? என்று சிலர் பேசிக் கொண்டதாகவும் சுரேஷ் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, அத்தீயணைப்பு வீரர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு தமது நண்பர்களுடன் சென்றதாக சுரேஷ் குறிப்பிட்டார்.  நீதிபதி, ரோபியா முகமட் முன்னிலையில் நடத்தப்பட்டு வரும் இந்த விசாரணை திங்கட்கிழமை தொடர்கின்றது.

spot_img

latest articles

explore more