Homeஅரசியல்பண்டார் ரிஞ்சிங்கில் நம்பிக்கை கூட்டணியின் நடவடிக்கை அறை; டத்தோஸ்ரீ முக்ரிஸ், டாக்டர் சேவியர் திறந்து வைத்தனர்

பண்டார் ரிஞ்சிங்கில் நம்பிக்கை கூட்டணியின் நடவடிக்கை அறை; டத்தோஸ்ரீ முக்ரிஸ், டாக்டர் சேவியர் திறந்து வைத்தனர்

செமினி, பிப் 16-

பிடிஎம் பண்டார் ரிஞ்சிங் செக்ஷன் 5,6இல் நம்பிக்கை கூட்டணியின் நடவடிக்கை அறை திறக்கப்பட்டுள்ளது. இதனை பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் மற்றும் குடிநீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

இதன் தலைவராக உலு லாங்காட் பிகேஆர் இளைஞர் பிரிவின் துணைத் தலைவர் விஷ்ணு தேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலு லாங்காட் பிகேஆர் தொகுதி தலைவர் புனேந்திரன் மற்றும் துணைத் தலைவர் ராஜன் ஆகியோர் அவருடன் இணைந்து செயல்படவுள்ளனர்.

இது குறித்து விஷ்ணு தேவ் கூறுகையில், இப்பகுதியில் 3,500 வாக்காளார்கள் உள்ளனர். செமினி இடைத்தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் முகமட் ஐமான் சைனாலுக்கள் அவர்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான உதவிகளை அவ்வப்போது செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் செர்டாங் பிகேஆர் தொகுதி தலைவர் டாக்டர் சதிஸ், ஷா ஆலம் பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் எஸ்.பி.சரவணன் மற்றும் இதர பிகேஆர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

 

spot_img

latest articles

explore more