Homeஅரசியல்செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கே வெற்றி -வீரன் நம்பிக்கை

செமினி இடைத்தேர்தலில் தேசிய முன்னணிக்கே வெற்றி -வீரன் நம்பிக்கை

செமினி, பிப் 16-

வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறவிருக்கும் செமினி சட்டமன்ற தொகுதிற்கான இடைத்தேர்தலில் தேசிய முன்னணியே வெற்றிப் பெறும் என்று  மஇகா மத்திய செயலவை உறுப்பினர் எம்.வீரன் தெரிவித்தார்.

இந்தத் தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. அதில் நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டியாக உள்ளது.

கடந்த தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் 8964 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றார்.

இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்கு வாக்காளர்களின் ஆதரவு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

மேலும் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் மக்கள நத்பிக்கை இழந்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more