Homeஅரசியல்பத்திரிக்கைளுக்கு இது சோதனைக் காலம் -சிவநேசன் கவலை

பத்திரிக்கைளுக்கு இது சோதனைக் காலம் -சிவநேசன் கவலை

ஈப்போ பிப் 17

நாட்டில் கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு பத்திரிகைகள் அதன்  நடைமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று மாநில அரசு ஆட்சிக்குழு உறப்பினர் ஏ.சிவநேசன் வலியுறுத்தினார்.

தமிழ்ப் பத்திரிக்கைகள் இன்றைய சூழ்நிலையில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. மக்களின் ஆதரவு தொடர்ந்து இல்லை என்றால் பத்திரிக்கைகள் அழிவை எதிர்நோக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

அதன் சவால்களை சமாளிக்க அதன் நிர்வாகங்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ளவேண்டும் என்று வலியுறத்தினார்.

பேரா மாநில தமிழ் இலக்கிய மேம்பாட்டு சங்கம் ஏற்பாட்டில் அரசு சார்பற்ற இயக்கங்கள் ஆதரவுடன் நடைபெற்ற தமிழ் பத்திரிக்கைகளை பாதுகாப்போம் பிரசாரத்தை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் இவ்வாறு பேசினார்.

தமிழ்ப் பத்திரிக்கைகள் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவு செய்யவேண்டும் அதன் வழி மட்டுமே வாசகர்களை கவர முடியும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பத்திரிக்கை பிரதிநிதிகள், வழக்கறிஞர் மதியழகன், மகப்பேறு  டாக்டர் வ. ஜெயபாலன் ஆகியோரின் உரையும் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் மாநில பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவர் பெ.கார்த்திகேசன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு இந்த நிகழ்வு சிறப்புடன் நடைபெற ஆதரவு அளித்த அனைவருக்கும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எம் ஏ. அலி நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

spot_img

latest articles

explore more