Homeஅரசியல்சபா மக்களின்  நலனே முக்கியம்! 

சபா மக்களின்  நலனே முக்கியம்! 

கோத்தா கினாபாலு, பிப். 19-

இம்மாநிலத்திற்குள் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) நுழைவைத் தடுக்காத வாரிசான் சபா கட்சியின் (வாரிசான்) நிலைப்பாடு இக்கட்சி  மாநில மற்றும் மக்களின் நலனுக்கு  முக்கியத்துவம் கொடுப்பதைக் காண முடிகிறது என்று கூறப்படுகிறது.

கட்சியின் நலனைவிட மக்கள் மற்றும் மாநிலத்தின் நலனில் அக்கறை காட்டும் வாரிசானின் போக்கு மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதோடு பக்காத்தான் அரசாங்கத்தின் கொள்கையை கட்சி பேதமின்றி நிறைவேற்றுவது அனைவரின் கடமையாக இருக்க வேண்டும் என்ற அமானாவின் கொள்கைக்கேற்ப அமைந்திருப்பதாக சபா அமானா கட்சி தலைவர் ஹரிஸ் அலிமுடின் தெரிவித்தார்.

“அதே வேளையில், சபாவிற்குள் பெர்சத்துவின் நுழைவு இம்மாநில மேம்பாட்டின் மீது  கூட்டரசு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வகை செய்யும்” என்றார் அவர்.

“உள்ளூர் மக்களைக் கொண்டு அமைக்கப்படும்  பெர்சத்து தலைமைத்துவம் 1963 ஆம் ஆண்டு மலேசிய உடன்படிக்கையில் இடம் பெற்றிருப்பதற்கேற்ப சபா மாநிலத்தின் நலன்களைத் தொடர்ந்து கட்டிக் காக்கும்” என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் விவரித்தார்.

spot_img

latest articles

explore more