Homeகலை உலகம்ஆஸ்ட்ரோ தங்கத்திரையில் நவம்பர் மாத புத்தம் புதிய திரைப்படங்கள்

ஆஸ்ட்ரோ தங்கத்திரையில் நவம்பர் மாத புத்தம் புதிய திரைப்படங்கள்

கோலாலம்பூர், நவம்பர் 12-

அண்மையில் திரையரங்களில் வெளிவந்த மகாமுனி, பக்ரீத், வைரஸ் மற்றும் மெய் போன்ற புத்தம் புதிய திரைப்படங்களை இந்தவொரு விளம்பர இடைவெளியின்றி இம்மாதம் ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி அலைவரிசை 241இல் கண்டு மகிழலாம்.

இத்திரைப்படத்தில் ஆர்யா மகா, முனி என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறுவயதில் பெற்றோரின் ஆதரவில்லாமல் பிரிந்து தனித்தனியே ஒருவரை ஒருவர் தெரியாமலேயே வாழ்கிறார்கள்.

இரண்டு கதைகள் கொண்ட இத்திரைப்படத்தில் ஒன்று, காஞ்சிபுரத்தில் வசிக்கும் மகா என்கிற மகாலிங்கத்தைச் சுற்றி நிகழ்கிறது. இன்னொன்று, ஈரோட்டில் வசிக்கும் முனி என்கிற முனிராஜைச் சுற்றி நடக்கிறது.

கார் ஓட்டுனராக வலம் வரும் மகா, தன்னுடைய மனைவியாக நடிக்கும் இந்துஜா மற்றும் குழந்தையுடன் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வருகிறார். மகா அடியாளாக கொலை செய்யும் வேலைக்கு கூலிப்படையாக ஏவப்படுகிறார். இதற்கிடையில் ஏதோ ஒரு காரணத்திற்காக மகாவைக் கொல்ல பெரிய திட்டம் போடப்படுகிறது. இறுதியில் மகா உயிர் ஆபத்தில் இருந்து தப்பித்தாரா? அவரைக் கொலை செய்ய முயலும் காரணம் என்ன? முனி என்ன ஆனார் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.

பல வருட போராட்டத்துக்குப் பின் கிடைத்த நிலத்தை உழுது, பயிரிடுவதற்காக, ஒரு பெரியவரிடம் கடன் வாங்கச் செல்கிறார் விக்ராந்த். அவ்வேளை, பக்ரீத் பண்டிகைக்கு குர்பானி கொடுப்பதற்காக வடமாநிலத்தில் இருந்து ஒரு ஒட்டகம் அதன் குட்டியுடன் வருகிறது. அந்த ஒட்டகக்குட்டியைத் தான் வளர்க்கிறேன் என்று சொல்லி அதனை விக்ராந்த் அழைத்துக் கொண்டு செல்கிறார்.

அந்த ஒட்டகத்திற்கு உடல்நிலை சரியில்லாமல் போக, இனி இதை இங்கு வளர்க்க முடியாது, ராஜஸ்தான் சென்று இந்த ஒட்டகத்தை நல்ல இடத்தில் விடவேண்டும் என விக்ராந்த் கிளம்புகிறார். ராஜஸ்தான் கொண்டு சேர்த்தாரா? வழியில் என்னென்ன சிரமங்களை அவர் சந்தித்தார்? பிரிவால் விக்ராந்த் குடும்பம் என்னானது? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.

கடந்த வருடம் கேரளா மாநிலத்தை உலுக்கி எடுத்த உயிர்கொள்ளி வைரஸான நிபா வைரஸ் பாதிப்பை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இயக்குனர் ஆஷிக் அபு இயக்கியுள்ளார் இந்த படத்தில் குஞ்சாக் பாபா, ஆசிப் அலி, டோவினோ தாமஸ், ரஹ்மான், இண்டிரைத் சுகுமாரன், சூபின் ஷாஹிர், ஸ்ரீனத் பாசி, திலீஷ் பொத்தன், பார்வதி, ரிமா கால்லிங், ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் ரேவதி, ரம்யா நம்பீசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார்.

இயக்குனர் பாஸ்கரன் இயக்கத்தில் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் ஆகியோர் நடித்துள்ள அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படமாகும். மனித உடல் உறுப்புகளுக்காக ஒரு தனியார் மருத்துவமனை உரிமையாளரும், மருத்துவரும் இணைந்து பலரைக் கடத்தி உடல் உறுப்புகளுக்காக் கொலை செய்கிறார்கள். அதைக் கண்டுபிடித்துவிடும் இத்திரைப்படத்தின் கதாநாயகன் சந்தித்த விளைவுகள் என்ன என்பதுதான் கதையாகும்.

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்.டி (அலைவரிசை 241)இல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு புதிய திரைப்படம் ஒளியேறும். இப்பொழுதே இந்த அலைவரிசையை வாங்கி இத்திரைப்படங்களைக் கண்டு மகிழுங்கள்.

spot_img

latest articles

explore more