Homeஅரசியல்இஸ்லாம் வேட்பாளரை ஆதரிக்கும்படி கையேடா? பக்காத்தான் சாடல்

இஸ்லாம் வேட்பாளரை ஆதரிக்கும்படி கையேடா? பக்காத்தான் சாடல்

குக்கூப், நவ.14-

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் வாக்காளர்கள், இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்த வேட்பாளரை ஆதரிக்கக்கூறும் கையேட்டை வழங்கிய குறிப்பிட்ட தரப்பினரின் செயலைப் பக்காத்தான் ஹராப்பான் சாடியுள்ளது.

நேற்று இரவு நடைபெற்ற பக்காத்தானின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில், அந்த கையேடு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட செயல் எனவும் பேஸ்புக் சமூக பிணைப்பு வலைத்தளத்தில் அக்கூட்டணி தெரிவித்துள்ளது.

பல்லின மக்களைக் கொண்டிருக்கும் தஞ்சோங் பியாய் தொகுதியில், பக்காத்தான் ஹராப்பானின் தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில், அந்தக் கையேடு வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் பிரச்சாரம் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில், இன வெறியை தூண்டும் வகையில் செயல்பட்ட அத்தரப்பினரின் சதிநாச வேலையை கடுமையாக கண்டிப்பதாகவும் பக்காத்தான் ஹராப்பான் குறிப்பிட்டுள்ளது.

spot_img

latest articles

explore more