Homeஅரசியல்தே.மு-விற்கு துன் மகாதீர் பிரச்சாரமா?

தே.மு-விற்கு துன் மகாதீர் பிரச்சாரமா?

பெக்கான் நானாஸ், நவ.14-

ஜொகூர், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலின் பிரச்சாரங்களில், தேசிய முன்னணி மேற்கொள்ளும் ஏமாற்று வேலைகளை நம்புவதற்கு அத்தொகுதியிலுள்ள சீன சமூகத்தினர் முட்டாள்கள் அல்ல என பக்காத்தான் ஹராப்பானின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

நீல நிற உடையில் எதிர்கட்சியினரை தாம் ஆதரிப்பதைப் போன்ற படங்களை வெளியிட்டும், இஸ்லாமிய வேட்பாளரை ஆதரிக்கும்படியான கையேடுகளை வழங்கியும், தேசிய முன்னணியினர் அதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் சாடியுள்ளார்.

தேர்தல்களில் சிறந்த முடிவை எடுப்பதில் சீனர்கள் வல்லவர்கள் என தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத்திலுள்ள அரசு சார்பற்ற இயக்கங்களுடனான செய்தியாளர்கள் சந்திப்பில், துன் டாக்டர் மகாதீர் அவ்வாறு கூறியுள்ளார்.

இதனிடையே, பக்காத்தானின் நேற்றைய பிரச்சாரத்தில், இஸ்லாமியர்களின் பொருட்களை முதலில் வாங்குங்கள் எனும் கையேடுகள் வைக்கப்பட்டிருந்தது குறித்தும் துன் டாக்டர் மகாதீர் கருத்துரைத்தார்.

நாட்டின் தேவைக்கு அனைத்து இனத்தவர்களும் பங்களித்துள்ளனர். அதனால், அனைத்து இனத்தவர்கள் தயாரிக்கின்ற பொருட்களை வாங்க வேண்டும். மலேசியாவில், குறிப்பிட்ட இனத்தவர்களின் பொருட்களைப் புறக்கணிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

latest articles

explore more