Homeஅரசியல்எம்.டி.யு.சி, எம்.இ.எப் சங்கங்களின் சட்டத்திருந்தங்கள் வரவேற்கப்படுகிறது –மனிதவள அமைச்சு

எம்.டி.யு.சி, எம்.இ.எப் சங்கங்களின் சட்டத்திருந்தங்கள் வரவேற்கப்படுகிறது –மனிதவள அமைச்சு

கோலாலம்பூர், நவ 14-

எம்.டி.யு.சி எனப்படும் மலேசிய வர்த்தக சங்க காங்கிரஸ் மற்றும் , எம்.இ.எப் மலேசிய தொழிலாளர் சங்கம் தங்களது சட்டத்திட்டங்களில் மேற்கொண்ட திருத்தங்களை மனிதவள அமைச்சு வரவேற்பதாக நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

நவம்பர் 11ஆம் தேதி அமைச்சில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு சட்டத்திட்டகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உலகளவில் மலேசிய தொழில்துறையை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சந்திப்பில் மனிதவள அமைச்சின் துணை பொது செயலாளார் கைர் ரஹ்மான் முகமட், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதி அப்துல் ஹலிம், தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதியாக அஸ்மான் ஹரோம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சட்டத்திருத்தங்களுக்கு அமைச்சு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார். சரவாக் தொழிற்சங்க காங்கிரஸ், தொழிலாளர் நலன்விரும்பிகள் என ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினர்களுக்கும் அமைச்சு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டது.

spot_img

latest articles

explore more