Homeஅரசியல்பதவிகளுக்கு ஆசைப்படாதவர் ரபிசி! -டத்தோஸ்ரீ அன்வார்

பதவிகளுக்கு ஆசைப்படாதவர் ரபிசி! -டத்தோஸ்ரீ அன்வார்

கூலிம், நவ.17-

NFC நிறுவனத்தின் வங்கி தரவுகளை அம்பலப்படுத்திய குற்றத்திற்காக, 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிகேஆரின் உதவித்தலைவர் ரபிசி ரம்லியை அண்மையில், சிலாங்கூர், ஷா ஆலாமிலுள்ள உயர்நீதிமன்றம் அந்த தண்டனையிலிருந்து விடுவித்திருந்து.

அதனைத் தொடர்ந்து, வெகுவிரைவிலேயே தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான எண்ணத்தைத் தாம் கொண்டிருக்கவில்லை என ரபிசி ரம்லி நேற்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அந்நிலைப்பாடு குறித்து யோசிப்பதற்கு ரபிசிக்கு அதிக கால அவகாசம் வழங்கப்படுவதாக, பிகேஆரின் தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அதன் வாயிலாக, ரபிசி பொறுமையாக யோசிக்க முடியும் என்பதோடு அவசரமான நிலையில் முடிவை எடுக்க வேண்டிய நிலை வராது எனவும் டத்தோஸ்ரீ அன்வார் கூறியுள்ளார்.

ரபிசி எனக்கு அதிகம் உதவியுள்ளார். கடந்தாண்டு பிகேஆரின் உதவித் தலைவர் பதவியிலிருந்து விலகிய தனது மகளான நூருல் இசாவைப் போன்ற போக்கை ரபிசி கொண்டுள்ளார். பல்வேறு தொந்தரவுகளை எதிர்நோக்கியுள்ள அவ்விருவரும், சாதகமான நிலையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதனால், அவ்விருவரும் முதலில் சிந்திக்கட்டும். அதற்கான அவகாசத்தையும் நாங்கள் வழங்குகின்றோம். காரணம், அவர்களின் போக்கு, பதவிகளையும் செல்வங்களையும் எதிர்பார்ப்பவர்களுடன் மாறுப்பட்டது எனவும் டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

latest articles

explore more