Homeஅரசியல்அம்னோ, பாஸ் ஒத்துழைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்! -ஸாஹிட் ஹாமீடி

அம்னோ, பாஸ் ஒத்துழைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்! -ஸாஹிட் ஹாமீடி

கோலாலம்பூர், நவ.17-

ஜொகூர், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி, தேசிய நல்லிணக்கம் வாயிலாக, உருவாக்கப்பட்டுள்ள அம்னோ, பாஸ் இடையிலான ஒத்துழைப்பை, மக்கள் அங்கீகரித்திருப்பதை காட்டுவதாக அம்னோவின் தலைவரான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி தெரிவித்த்துள்ளார்.

ம.சீ.ச மற்றும் ம.இ.கா-வுடன் பாஸ் அதிகாரப்பூர்வ தொடர்பைக் கொண்டிருக்காவிட்டாலும், அக்கட்சி தேசிய முன்னணியில் உள்ள அம்னோவுடன் நட்பு ரீதியிலான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் கிடைத்துள்ள வெற்றி மக்களின் வெற்றியாகும். மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கியும் புறக்கணித்தும் வந்த அரசாங்கத்தை, அவர்கள் நிராகரித்திருப்பதை அத்தேர்தல் முடிவு வெளிப்படுத்துகின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் மீது, மக்கள் நம்பிக்கையைக் கொண்டிருக்கவில்லை. தங்களின் எதிர்காலத்தை தேசிய நல்லிணக்கம்தான் தற்காக்கும் என்பதால், அதனை அங்கீகரிப்பதற்கான ஆதரவு குரலை அவர்கள் வழங்கத் தொடங்கியிருப்பதாகவும் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி குறிப்பிட்டுள்ளார்.

spot_img

latest articles

explore more