Homeமலேசியாமார்ச் 1 முதல் பள்ளி திறப்பு : பேருந்து ஓட்டுநர்கள் மகிழ்ச்சி. இருந்தாலும்...

மார்ச் 1 முதல் பள்ளி திறப்பு : பேருந்து ஓட்டுநர்கள் மகிழ்ச்சி. இருந்தாலும்…

கோலாலம்பூர் | பிப்பரவரி 27

மார்ச் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்க இருக்கின்ற நிலையில் தற்போது பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் மகிழ்ச்சிப் பெருமூச்சை விட்டுள்ளனர்.

ஆரம்பக் கட்டத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களை உட்படுத்திய வகுப்புகள் திறக்கப்பட்டாலும் நம்பிக்கை ஒளியை பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் பார்க்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளனர். கோவிட்-19 தாக்கத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்படவுள்ள பள்ளிக் கூடங்களால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடங்கியது முதல் இந்தத் துறை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தனர்.

ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் இத்துறையில் இருந்து விலகி விட்டனர் என்றும் இணையத்தை அடிப்படையாகக் கொண்ட கீக் பொருளாதாரத் துறையை நோக்கிச் சென்று விட்டனர் என்று மலேசிய பள்ளிப் பேருந்து சங்கக் கூட்டமைப்பின் தலைவர் அமலி முனிஃப் ரம்லி கூறினார்.

பல கட்டணங்களைச் செலுத்தும் சூழலில் இருக்கும் எங்களுக்கு இறுதியாகப் பெற்றோர்களிடம் இருந்து கட்டண வசூலிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் மட்டுமே வருமானம் வந்தது. அதன் பின்னர் மிக மோசமான நிதி நெருக்கடிக்கு ஆளானோம் என அவர் குறிப்பிட்டார்.

தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கபடவுள்ள நிலையில் இன்னும் பல பெற்றோர்கள் பள்ளிப் பேருந்தில் தங்கள் பிள்ளைகளை அனுப்புவதற்குத் தயங்குகிறார்கள். கோவிட்-19 தொற்றுக்குத் தங்கள் பிள்ளைகள்  ஆளாகிவிடுவார்கள் என அவர்கள் அச்சப்படுகிறார்கள்.

பல பெற்றோர்களுக்கு விட்டிலிருந்தே வேலை செய்யும் வசதி தர்போது இருப்பதால் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி தாங்களே பள்ளிக்குத் தங்கள் சொந்த வாகனத்தில் கூட்டிச் செல்கிறார்கள். இதனாலேயே முன்பு போல  பள்ளிப் பேருந்து சேவைக்கானத் தேவை தற்போது நடப்பில் குறைந்துள்ளது.

ஆகவே, முன்பு போல் இத்துறை மீண்டும் முழுதாய் மீண்டெழும் என்பதில் சந்தேகமே எழுந்துள்ளது என அமலி முனிஃப் ரம்லி கூறினார்,

தற்போது ஏறத்தாழ 500,000 மாணவர்கள், அதாவது 33 % பள்ளிப் பேருந்து பயணிகள் குறைந்திருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

spot_img

latest articles

explore more