Homeமலேசியாதடுப்பூசி வந்து விட்டாலும் முகக்கவரியும் எஸ்.ஓ.பி.யும் கடைபிடித்தல் அவசியம் – கைரி ஜமாலுடின்

தடுப்பூசி வந்து விட்டாலும் முகக்கவரியும் எஸ்.ஓ.பி.யும் கடைபிடித்தல் அவசியம் – கைரி ஜமாலுடின்

கோலாலம்பூர் | பிப்பரவரி 27

பொது மக்கள் கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொன்டாலும் பொது இடங்களில் முகக்கவரி அணிவதும் எஸ்.ஓ.பி.பி.யைக். கடைபிடிப்பதும் கட்டாயம் என தேசிய கோவிட்-19 தடுப்பூசி செயல்திட்ட அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இந்த நடைமுறை கோவிட்-19 தடுப்பூசியின் மீதான நம்பிக்கையின்மையைப் பொருள் கொள்ளாது, மாறாக கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் மீதான அதன் பலனளிக்கும் தன்மை தொடர்பானத் தரவுகள் இன்னும் முழுமையாகப் பெறப்படவில்லை.

மலேசிய சுகாதார அமைச்சின் இயக்குநரின் ஆலோசனையின்படி தடுப்பூசி போட்டுக் கொன்டவர்கள் உட்பட அனைவரும் தற்சமயம் எஸ்.ஓ.பி.யைக் கடைபிடிப்பதைத் தொடர்வோம்.

எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் முகக்கவரி அணிவது கட்டாயம்.

நேற்றைய நிலவரப்படி, 1,183,779 பேர் மைசெஜாத்தெரா செயலி வழி கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளப் பதிவு செய்துள்ள வேளையில், இதுவரை 3,580 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

spot_img

latest articles

explore more