Homeமலேசியாஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்! சுப்ரமணியம் துளசி தகவல்

ஜி.எஸ்.டி. சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்! சுப்ரமணியம் துளசி தகவல்

கோலாலம்பூர், செப். 18-
டிஜிட்டல் பொருளாதாரத்தின் கீழ் மலேசியாவில் செயல்பட்டு வரும் அந்நிய நிறுவனங்களிடமிருந்து பில்லியன் கணக்கான வரியை வசூலிப்பதற்கு வசதியாக 2014ஆம் ஆண்டு பொருள் சேவை வரிச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என மலேசிய சுங்கத் துறைத் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ சுப்ரமணியம் துளசி தெரிவித்தார்.

இந்த திருத்தம் மீதானப் பரிந்துரை அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். டிஜிட்டல் பொருளாதாரத்தின் மிகப் பெரிய இழப்பீடு பயனீட்டாளர்களுக்கான வர்த்தகப் பரிவர்த்தனையாகும். இந்தப் பரிவர்த்தனையை வெளிநாடுகளில் மேற்கொள்ளும் நிறுவனங்கள் அதை நேரடியாக இங்குள்ள பயனீட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கும்.

இச்சேவைக்கு வரி ஏதும் விதிக்கப்படாததால் அவர்களுக்கு கட்டணம் உடனடியாகக் கிடைத்து விடும். இது உண்மையில் வரி விதிக்கப்படும் உள்ளூர் தொழில்துறையினருக்குக் காட்டப்படும் பாகுபாடு ஆகும் என 2017 ஜிஎஸ்டி மாநாட்டிற்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

தற்போது மலேசியாவில் மென்பொருள் மேம்பாட்டாளர் மற்றும் புகழ்பெற்ற சமூக வலைத் தள உருவாக்குனர்களுக்கு வரி விதிக்கப்படவில்லை. இந்த பொருள் சேவை வரிச் சட்டம் திருத்தம் செய்யப்படுவது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் அமலாக்கத் தரப்பினரிடையே இன்னும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more