Homeமலேசியாதிவால் ஆகாத அரசால் மட்டுமே 35 ஆயிரம் வெள்ளி வீடுகள் சாத்தியம்! ஸாஹிட் ஹாமீடி

திவால் ஆகாத அரசால் மட்டுமே 35 ஆயிரம் வெள்ளி வீடுகள் சாத்தியம்! ஸாஹிட் ஹாமீடி

லெங்கோங், ஏப். 2-
மக்கள் வீடமைப்பு திட்டம் (பி.பி.ஆர்) உள்பட மக்களுக்கான பல்வேறு வசதிகளை அரசாங்கத்தால் ஏற்படுத்த முடிவது அந்த அரசாங்கம் திவால் ஆகாததைக் காட்டுவதாக துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மீது இத்தகைய குற்றச்சாட்டை சுமத்தும் தரப்பினர்கள் திவாலான சிந்தனையைக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

லெங்கோங்கில் கட்டப்படவிருக்கும் பி.பி.ஆர். அடுக்ககத்தில் 500 வீடுகள் கட்டப்பட்டு 1 வீட்டிற்கு 35,000 வெள்ளி என்ற விலையில் விற்கப்படவுள்ளது. 194,000 வெள்ளி மதிப்பில் வீடுகளைக் கட்டி 35,000 வெள்ளி விலையில் விற்கக்கூடிய மேம்பாட்டாளர்கள் எங்கு உள்ளனர்? நிச்சயம் இல்லை.

திவால் ஆகாத அரசாங்கத்தால் மட்டுமே 35,000 வெள்ளி விலையில் வீடுகளைக் கட்ட முடியும் என லெங்கோங்கில் கட்டப்படவிருக்கும் பி.பி.ஆர். அடுக்ககத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில், பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காடீரும் கலந்துக்கொண்டார்.

spot_img

latest articles

explore more