Homeசமூகம்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசை தேர்ந்தெடுங்கள்! - டத்தோஸ்ரீ ரோஸ்மா

பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசை தேர்ந்தெடுங்கள்! – டத்தோஸ்ரீ ரோஸ்மா

கோலாலம்பூர், ஏப். 2-

பெண்களின் மேம்பாட்டில் அரசு எப்போதும் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. நாட்டின் வளர்ச்சியின் பெண்கள் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கான வாய்ப்புகளையும் அரசு அதிகரித்துள்ளது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ படுக்கா ரோஸ்மா மன்சூர் தெரிவித்தார்.

நாட்டின் தொழில் சக்தியின் 46 விடுக்காடு இருந்த பெண்கள் தற்போது 54 விடுக்காட்டி எட்டியுள்ளது. குறிப்பாக தனியார் மற்றும் அரசு துறைகளில் முடிவெடுக்கும் சக்தி பெண்களுக்கு 30 விழுக்காட்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசியாவில் உள்ள நாடுகளில் மலேசியாவில் மட்டுமே பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பெண்கள் வளர்ச்சிக்கான அரசு பல்வேறு திட்டங்களையும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது. பி 40 பிரிவின் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொருளாதார ரீதியில் மேம்பட பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதையும் அவர் நினைவுக் கூர்ந்தார்.

அதோடு தனித்து வாழும் தாய்மார்களும் சிரமத்தை எதிர்நோக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கின்றது. அவர்களுக்கு கைத்தொழில் பயிற்சி வழங்கப்படுகின்றது. அதன் மூலம் அவர்கள் தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்கிறார்கள் என டத்தோஸ்ரீ ரோஸ்மா கூறினார்.

இப்படி பெண்களின் மேம்பாட்டில் அக்கறை செலுத்தும் அரசுக்கும் நாம் முழுமையான மற்றும் பிளவுப்படாத ஆதரவை வழங்க வேண்டுமென ஒரே மலேசியா சக்தி இயக்கத்தின் தேசிய மகளிர் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம்மகளிர் விழாவில் முக்கிய அம்சமாக 3 மகளிர்களுக்கு அன்னை கே.ஆர். சாரதாவின் விருது வழங்கப்பட்டது. தொழில்துறையில் சாதித்த ஜனாகி நாராயணன், பொதுச் சேவை துறையில் குராமா அப்பண்ணா ஆகியோருக்கு விருதும் காசோலையும் வழங்கப்பட்டது.

நாட்டின் வளர்ச்சியை பெண்கள் சக்தியே உறுதிப்படுத்தும் என்று மலேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் மகளிர் அணி தலைவி டத்தின்ஸ்ரீ வேணி தனேந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். பெண்கள் என்றாலே அடிமை என்றிருந்த கலம் இப்போது மாறி விட்டது.

ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதோடு வரும் காலங்களிலும் பெண்களின் சாதனை தொடர ஒரே மலேசியா சக்தி இயக்கம் பாடுபடுமென டத்தின் வேணி நம்பிக்கை தெரிவித்தார்.

3 அயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இதில் இதர பிரமுகர்களுடன் டத்தோஸ்ரீ தனேந்திரனும் பங்கேற்றார்.

spot_img

latest articles

explore more