Homeமலேசியாசிகிச்சை, ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு!

சிகிச்சை, ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு!

கோலாலம்பூர், ஆக. 8-

 மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பதாக வழங்கப்படும் தொடக்கக்கட்ட சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் 400 மில்லியன் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

 மலேசியர்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கும் அரசாங்கத்தின் எண்ணத்திற்கு ஏற்ப இந்த நிதி ஒதுக்கீடு அமைந்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.

     நாட்டிலுள்ள எல்லா மருத்துவமனைகளுக்கும் புதிதாக மொத்தம் 500  மருத்துவ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவையை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக 500 ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்க அந்த ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டது. புதிதாக வாங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

குறிப்பாக, மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் அவசர நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் வசதியை இந்த வாகனங்கள் கொண்டுள்ளன. சிலாங்கூரிலுள்ள ஷா ஆலாம் மருத்துவமனைக்கு புதிதாக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய டத்தோஸ்ரீ சுப்ரமணியம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து இந்நிகழ்ச்சியில், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றின் சுகாதார துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கான மாதிரி சாவிகள் சம்பந்தப்பட்ட துறைகளின் இயக்குநர்களிடம் வழங்கப்பட்டன.

 

spot_img

latest articles

explore more