Homeமலேசியா1எம்டிபி விவகாரம்; நஜீப் - ரோஸ்மாவிடம் மேலும் விசாரணை

1எம்டிபி விவகாரம்; நஜீப் – ரோஸ்மாவிடம் மேலும் விசாரணை

கோலாலம்பூர், செப். 28
1எம்டிபி நிதி முறைகேடல் விவகாரம் தொடர்பில் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மற்றும் அவரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரிடமும் மேலும் விசாரணை நடத்தப்படும் என்று புக்கிட் அமான் வர்த்தகக் குற்றவியல் இலாகாவின் இயக்குநர் டத்தோஸ்ரீ அமார் சிங் இஷார் சிங் தெரிவிதுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை போலீசார் 70 பேரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அம்னோவுக்குச் சொந்தமான 4.33 கோடி வெள்ளியை போலீசார் களவாடியதாக இணையத்தள எழுத்தாளர் ராஜா பெத்ரா கமாருடின் சுமத்திய குற்றச்சாட்டு சம்பந்தமான ஆதாரத்தை வெளியிட வேண்டுமென அவர் சவால் விடுத்தார்.

கடந்த மே 25ஆம் தேதி செய்தியாளர் கூட்டத்தில் பெவிலியன் ரெசிடென்ஸியிலிருந்து 11.4 கோடி வெள்ளி பெறுமானமுள்ள விலையுயர்ந்த பொருள்களைப் போலீசார் பறிமுதல் செய்ததாகத் தெரிவித்த பின்னர், நஜீப் அம்னோவிற்கு சொந்தமான 16 கோடி வெள்ளி சம்பந்தமாக போலீஸில் புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

latest articles

explore more