Homeஅரசியல்டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி அம்னோவின் தலைவர் பதவியை துறந்தார்

டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி அம்னோவின் தலைவர் பதவியை துறந்தார்

கோலாலம்பூர், டிச 18-

அம்னோவின் தேசிய தலைவர் பொறுப்பை அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசானிடம் ஒப்படைப்பதாக டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தற்போது அறிவித்திருக்கிறார்.

அம்னோ தொடர்ந்து சிறந்த எதிர்க்கட்சியாக செயல்படுவதோடு வலுவான ஒரு கட்சியாக செயல்படுவதற்காக தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இனி வரும் காலங்களில் அம்னோ உறுப்பினர்கள் கட்சியின் மீது அக்கறை கொண்டு எந்தவொரு பிளவும் இல்லாமல் ஒரு மனதாக செயல்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்ததோடு இனி கட்சியை டத்தோஸ்ரீ முகமட் ஹசாந் வழிநடத்துவார் என்றும் அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more