Homeசமூகம்ஈப்போ இந்திய கலை கலாச்சார பண்பாட்டு இயக்கத்தின் ‘காலத்தை வென்றவன் 7’ கலை விழா

ஈப்போ இந்திய கலை கலாச்சார பண்பாட்டு இயக்கத்தின் ‘காலத்தை வென்றவன் 7’ கலை விழா

ஈப்போ, பிப் 18-

ஈப்போ இந்திய கலை கலாச்சார பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 102ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காலத்தை வென்றவன் 7 கலை விழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்தக் கலை விழா வரும் பிப்ரவரி 23ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு  ஈப்போ சுங்கை பாரியிலுள்ள அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தலைவர் பாலையா பெரியசாமி தெரிவித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கி 6 ஆண்டுகளாக நடைபெற்ற இந்நிகழ்வு இவ்வாண்டு 7 ஆம் ஆண்டாக மிக சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இந்நிகழ்வில் எம்ஜிஆர் அவர்களின் வாழ்கை வரலாறு, காணொளி காட்சி,  பாடல்கள், மலேசிய எம்.ஜி.ஆர்களின் காட்சியும் கானமும் இடம்பெறுவதோடு கலை, சமுக  காவல்துறை, அரசியல், பத்திரிக்கை மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் *சேவையாறியவரகளுக்கு எம்ஜிஆர் விருது வழங்கி சிறப்பிக்கப்படும்.

மேலும், இந்நிகழ்வில் முத்தாய்பாய் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அரசவை கவிஞராக விழங்கி கவியரசு கண்ணதாசன் அவர்களின் புதல்வரும் கண்ணதாசன் பதிப்பகத்தின் நிறுவனமும் திருவாளர் காந்தி கண்ணதாசன் அவர்கள் தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரிந்து மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை பற்றிய பேருரையாற்றுவார்கள்.

முற்றிலும் இலவசமாக இரவு உணவுடன் நடைபெறும் இந்நிகழ்வில் பொது மக்கள், பொது இயக்கங்கள், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பாலையா கேட்டுக்கொண்டார்.

spot_img

latest articles

explore more