Homeகுற்றவியல்தைப்பிங் காப்பகத்தில் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் ! தாயார் போலீசில் புகார்

தைப்பிங் காப்பகத்தில் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் ! தாயார் போலீசில் புகார்

தைப்பிங் பிப் 19-

இங்கு தைப்பிங்கில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சிறுவனை, ஒரு நபர் சரமாறியாக தாக்கிய விவகாரம் தொடர்பாக அச்சிறுவனின் தாயார் போலீசில் புகார் செய்துள்ளார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து வரும் அதிகாரி ஒருவர் தாக்கும் வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது,

இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் வேளையில் இந்த வீடியோ பதிவை பலர் வாட்சாப்பில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த காப்பகத்தில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் அந்த அதிகாரி அவரின் காரில் சியூகம் ஒட்டப்பட்டதை கண்டித்து அந்த சிறுவனை அடித்த காட்சி பலருன் பார்வைக்குள்ளானது.

இந்த விவகாரம் தொடர்பாக சமூக நல இலாகா அதிகாரிகள் அந்த காப்பகத்திற்கு சென்று சிலரிடம் வாக்கு முலம் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் போலீசில் புகார் செய்ததைத் தொடந்து விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.

spot_img

latest articles

explore more