Homeஅரசியல்நிலத்தை மீட்க மக்கள் போராட்டத்திற்கு தயாராகின்றனர் 

நிலத்தை மீட்க மக்கள் போராட்டத்திற்கு தயாராகின்றனர் 

ஈப்போ பிப் 19-

பெம்பான் நிலத்திட்டத்தை மேம்படுத்த முன்னாள் பிரதமர் வழங்கிய ரிம. 50 லட்சத்தை மஇகாவிடம் ஒப்படைக்கவில்லை என்று மாநில மஇகா தலைவர் டத்தோ வி.இளங்கோ கூறினார்.

அந்த பணம் மாவட்ட நில அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மாநில அரசாங்கம் அங்கிகரித்த நிலத்தை மேம்படுத்த நில அலுவலகம் அந்த நிதியை செலவு செய்தது.

நடப்பு அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதியான புந்தோங் சட்டமனற உறுப்பினர் ஆ.சிவசுப்பிமணியம் வெளியிட்ட அறிக்கையில் புந்தோங்கில் புறம்போக்கு நிலத்தில் முன்பு வசித்து வந்தவர்களுக்கு பெம்பான் நிலத்திட்டத்தில் இடம் இல்லை, அவர்களுககு புந்தோங்கில் குறைந்த விலை வீடுகள் வழங்கப்படும் கூறியுள்ளார்.

பெம்பான் நிலத்திட்டம் புந்தோங் மக்களுக்காக ஒதுக்கப்பட்டது . அதனை மாநில அரசாங்கம் கடந்த 2011 ஆம்  ஆண்டு அங்கிகரித்தது.

இன்று அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது கூறுவது ஏற்க முடியாது.

ஆகவே அந்த நிலத்தை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமாட் பைசால், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசனிடமும் மகஜர் வழங்கப்படும் என்றார்

spot_img

latest articles

explore more