ஈப்போ பிப் 20-
ஈப்போ, ஜாலான் கோப்பெங், ஜாலான் ராஜா டாக்டர் நஸ்ரின் ஷாவிலுள்ள டைம் ஸ்குவேர் கட்டடத்தில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் அறுவர் பலியாகியுள்ளனர். அதில் சிலர் கவலைக்கிடமான சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று காலை 5.45 மணியளவில் நிகழ்துள்ளது.

அந்த கட்டடத்திலிருந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் தொடக்கமாக மீட்கப்பட்ட மூவரில் இரு ஆடவர்கள் இறந்துள்ளனர் . ஒருவர் உடல் மிகவும் மோசமான சூழ்நிலையில் பாதிக்கப்பட்டு ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த கட்டடத்தில் மோலும் சிக்கியிருந்தவர்களை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மேலும் நால்வர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் மேலும் நால்வர் அறை ஒன்றில் பாதுகாப்பாக இருந்துள்ளனர். அனைவரும் மீட்கப்படனர் என்று தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் இறந்த இரு ஆடவர்கள் உள்நாட்டினர் என்றும் இதர நால்வர் வெளிநாட்டினர் என்று அடையாளம் கூறப்பட்டது. இவர்கள் அனைவரும் இதில் சிக்கி வெளியேற முடியாமல் மூச்சு விட முடியாமல் இறந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் தீ ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய தீயணைப்பு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் .


