பொன்தியான், அக்டோபர் 31-
எதிர்வரும் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ள தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் மசீசாவின் வீ ஜெக் சேங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ஜோகூரின் தேசிய முன்னணி தலைவர் ஹஸ்னி முகமட் நேற்று செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
ஜோகூர் மாநில அம்னோ தொடர்பு குழு செயலாளர் டத்தோ ஷம்சூல் பாரி ஜமாலி, தஞ்சோங் பியாய் அம்னோ தொகுதி தலைவர் டத்தோ ஜெப்ரிடின் அதான், ஜோகூர் மஇகா துணைத் தலைவர் எஸ்.சுப்பையா ஆகியோர் உடனிருந்தனர்.

அரசியல் அனுபவத்தின் அடிப்படையில் சிறந்த வேட்பாளராக இருப்பதற்கு அனைத்து தகுதிகளும் வீ ஜெக் சேங்கிற்கு இருப்பதாக ஹஸ்னி முகமட் தெரிவித்தார்.
கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜசெகவின் அஹ்மாட் டோனை 12,371 வாக்குகளிலும் கடந்த 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜசெகவின் மட்சீர் இப்ராஹிமை 5,457 வாக்குகளில் தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


