Homeசமூகம்நவம்பர் 3ஆம் தேதி மஇகாவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு!

நவம்பர் 3ஆம் தேதி மஇகாவின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு!

கோலாலம்பூர், நவ. 1-

மலேசிய இந்திய காங்கிரசின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நவம்பர்3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை புத்ரா உலக வாணிப மையத்தில் துன் அப்துல் ரசாக் மண்டபத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற இருக்கின்றது.

ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்ளும் இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பை அக்கட்சியின் தேசிய தலைவர் டான் ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார் என பொதுச் செயலாளர் டத்தோ அசோகன் கூறினார்.

மதியம் 12 மணி தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த திறந்த இல்ல உபசரிப்பு தேசிய முன்னணியின் அம்னோ, மசீச, இதரஉறுப்பு கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்கள், பாஸ் கட்சி தலைவர்கள், மஇகாவின் தொண்டர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த பிரம்மாண்ட திறந்த இல்ல உபசரிப்பில் வெளிநாட்டு தூதர்கள், வர்த்தகர்கள், பொது இயக்கங்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள் என்று பலர் அழைக்கப்பட்டு உள்ளதாகவும் டத்த்ப்ப் அசோகன் குறிப்பிட்டார்.

மேலும் இந்த திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொள்ளும் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் குதுகலத்திற்காக உள்ளூர் கலைஞர்களின் படைப்புகளும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அதோடு அறுசுவை உணவும் பரிமாறப்படும் எனக் கூறினார்.

இந்த மாபெரும் விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் டத்தோ அசோகன் கேட்டுக் கொண்டார்.

spot_img

latest articles

explore more