Homeசமூகம்மஇகா தீபாவளி உபசரிப்பு: 7 ஆயிரம் பேர் பங்கேற்பு!

மஇகா தீபாவளி உபசரிப்பு: 7 ஆயிரம் பேர் பங்கேற்பு!

கோலாலம்பூர், நவ. 3-

மலேசிய இந்திய காங்கிரசின் தீபாவளி பொது உபசரிப்பில் 7000 பேர் கலந்து கொண்டனர்.

மலேசிய இந்திய காங்கிரஸ் தலைமையகத்தின் அருகாமையிலுள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், அம்னோ, தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சையிட் ஹமிடி, துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாசன், முன்னாள் தற்காப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ ஹிசாமுடின் துன் உசேன் உட்பட உறுப்பு கட்சியின் தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டது மஇகாவிற்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

ஆடல், பாடல் என கேளிக்கை நிகழ்ச்சிகளும் இந்த தீபாவளி பொது உபசரிப்பில் மிக விமர்சையாக நடந்தது. இந்த விழாவில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப், அம்னோ தலைவர் முகமட் சையிட் ஹமிடி ஆகியோருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. முன்னதாக மஇகாவின் மூத்த தலைவர் துன் சாமிவேலுவிற்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

பிறகு அனைவரும் ஒன்றாக இணைந்து அணிச்சல் வெட்டி தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தனர்.

spot_img

latest articles

explore more