Homeஅரசியல்தோமி தோமஸ் பதவி விலக வேண்டும்!

தோமி தோமஸ் பதவி விலக வேண்டும்!

கோலாலம்பூர், நவ.7-

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான பொருட்களை வைத்திருந்ததாக சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் இரத்து செய்யப்பட்டது தொடர்பில், நாட்டின் சட்டத்துறை தலைவர் தோமி தோமஸ் பதவி விலக வேண்டுமென நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வலியுறுத்தியுள்ளார்.

சிரம்பான் செஷன் நீதிமன்றத்தில், அரசு தரப்பு வழக்கறிஞர் அஸ்லினா ஆஹாட் செய்திருந்த மனுவை ஏற்று நீதிபதி மடியா ஹாருல்லா அக்குற்றச்சாட்டுகளை இரத்து செய்திருந்தார்.

அது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்ட இஸ்மாயில் சப்ரி யாக்கோப், புதிய மலேசியா தூய்மையான மலேசியா மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு போராடுவதாக கூறிவிட்டு எதிர்மறையாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தோமி தோமஸ் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவரது நடவடிக்கை நிபுணத்துவத்துடன் செயல்பட்ட அரசு மலேசிய போலீஸ் படையின் ஆற்றலுக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

spot_img

latest articles

explore more