Homeஅரசியல்பிரதமர் விவகாரம்: மீண்டும் பழைய தவற்றைப் புரிய விரும்பவில்லை!

பிரதமர் விவகாரம்: மீண்டும் பழைய தவற்றைப் புரிய விரும்பவில்லை!

கோலாலம்பூர், நவ.7-

தனக்கு அடுத்ததாக, பிரதமர் பொறுப்பை ஏற்கக்கூடிய நபரை தேர்வு செய்வதில், தாம் மீண்டும் கடந்த கால தவறுகளைப் புரியக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

அண்மையில், தாய்லாந்து, பேங்கோக்கில் ஃபைனான்சியல் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த நேர்க்காணலில், 2003ஆம் ஆண்டில் துன் அப்துல்லா அகமட் படாவி, 2009ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஆகியோரிடம் பிரதமர் பொறுப்பைத் தாம் ஒப்படைத்ததைச் சுட்டிக்காட்டி துன் மகாதீர் அக்கூற்றை முன்வைத்துள்ளார்

ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி)-யினால் ஏற்பட்டுள்ள கடன் சுமை உள்பட அனைத்து பொருளாதார விவகாரங்களுக்கும் தீர்வு காணப்படும் வரையில், நாட்டை தமக்கு அடுத்து வழிநடத்துக்கூடிய வேட்பாளர் தொடர்பில் எவ்வித மாற்றமும் இல்லை என துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பொறுப்பை ஒப்படைப்பது தொடர்பில், குறிப்பிட்ட தேதி அல்லது காலம் நிர்ணயிக்கப்படவில்லை. மாறாக, அப்பொறுப்பிலிருந்து விலகும் தமது முடிவு மலேசியா எதிர்நோக்கியிருக்கும் பல்வேறு பிரச்சனைகளைச் சார்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், நாட்டிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்ட போது, அதற்கு தீர்வு கண்ட அனுபவத்தைத் தாம் கொண்டிருப்பதால், தற்போதைய பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் வரையில் தாம் பிரதமர் பொறுப்பைத் தொடர வேண்டுமென அவர்கள் விரும்புவதாகவும் துன் மகாதீர் கூறியுள்ளார்.

spot_img

latest articles

explore more