Homeசமூகம்காஜாங்கில் தித்திக்கும் தீபாவளி கலை இரவு

காஜாங்கில் தித்திக்கும் தீபாவளி கலை இரவு

காஜாங், நவம்பர் 7-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாங்கி இந்தியர் முன்னேற்ற கழகமும், காஜாங் சட்டமன்ற மக்கள் சேவை மையமும் இணைந்து தித்திக்கும் தீபாவளி கலை இரவு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்தக் கலை நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை 10ஆம் தேதி இரவு 7.00 மணியளவில் காஜாங் ADUN அலுவலகம் முன்புறம், மெட்ரோ எவெனுயுவில் நடைபெறவுள்ளது.

கலை நிகழ்ச்சியை தொடர்ந்து நடக்கும் விருந்து உபசரிப்பிலும் சுற்று வட்டார மக்கள் திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக் குழுவினர்கள் கேட்டுக் கொண்டனர்.

spot_img

latest articles

explore more