Homeசமூகம்கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை - எச்ஆர்டிஎஃப் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பயிற்சி

கோலாலம்பூர் & சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை – எச்ஆர்டிஎஃப் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பயிற்சி

கோலாலம்பூர், நவ.21-
ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியரும் அவசியம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டிருக்கும் மனித வள மேம்பாட்டு நிதியகம் (எச்ஆர்டிஎஃப்) கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையுடன் இணைந்து விழிப்புணர்வு பயிற்சி ஒன்றை  நடத்தியது.

இந்நிகழ்ச்சி தலைநகர், ஜாலான் துவாங்கு அப்துல் ரஷ்மானில் அமைந்த கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபை அலுவலக பயிற்சி அறையில் நடைபெற்றது.

மனித வள மேம்பாட்டு நிதியகத்தின் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதோருக்கான இப்பயிற்சியில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் மனித வள மேம்பாட்டு நிதியகத்தில் தற்போது 28,984 பேர் உறுப்பினர்களாகத் தங்களைப் பதிந்து கொண்டிருப்பதாக பயிற்சியாளரான எச்ஆர்டிஎஃப் கணக்கியல் நிர்வாகப் பிரிவு அதிகாரி நோர் ஹானிஸ் சுல்கிப்ளி குறிப்பிட்டார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த இவர்களுக்குப் பயிற்சியளிப்பதே தங்களின் தலையாய நோக்கம் என்றும் இதன் வழி இவர்கள் தத்தம் பணியில் ஆக்கப்பூர்வ பங்களிப்பை வழங்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உதவி பயிற்சி திட்டம்(எஸ்பிஎல்), சிறப்பு  உதவி பயிற்சி திட்டம்(எஸ்பிஎல்-சிறப்புத் திட்டம்),கூட்டு பயிற்சி திட்டம் (எஸ்எல்பி) உள்ளிட்ட தனது உறுப்பினர்களுக்காக எச்ஆர்டிஎஃப் வழங்கும்  பல்வேறு பயிற்சித் திட்டங்கள் குறித்து  நோர் ஹானிஸ் இந்நிகழ்ச்சியில் விளக்கமளித்தார்.

தயாரிப்பு, மின்சாரம், மின்னியல்,தளவாடம், கிடங்கு பராமரிப்பு, பிளாஸ்டிக்,போக்குவரத்து, உணவு மற்றும் சுவைபானம், எரிவாயு, கல்வி, ஹோட்டல், தகவல் சேவை, இலக்கவியல் போன்ற துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு எச்ஆர்டிஎஃப் பயிற்சி அளித்து வருவதாக இதன் வாடிக்கையாளர் பிரிவு அதிகாரி முகமது ஷாரிசால் சே டெரிஸ் விவரித்தார்.பயிற்சியில் பங்கேற்பவர்கள் பெறும் அனுகூலங்கள் குறித்து பேசிய அவர், தேவையான ஆலோசனைகள், பயிற்சிக்கான போக்குவரத்து  செலவினம் போன்றவையும் இவற்றில் அடங்கும் என்றார்.

இதன் பொருட்டு இன்னும் அதிகமான நிறுவனங்களின் ஊழியர்களை உறுப்பினர்களாகச் சேர்ப்பதற்குத் தாங்கள் இலக்கு கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சபையின் துணை தலைமைச் செயலாளர் டோனி கிலிஃபோர்ட்டின் வரவேற்புரையுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு நல்ல பலனை அளித்தது என்றே கூற வேண்டும்.

spot_img

latest articles

explore more