புத்ராஜெயா, நவ.26-
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க சிறப்பு செயற்குழுவை அமைக்கக் கோரி, அருண் துரைசாமி தலைமையிலான குழுவினர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் மகஜரை வழங்கியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆலயத்தை நிர்வகித்துவரும் நபரை அந்த ஆணையம் விசாரணைக்காக தடுத்து வைத்து 9 மாதங்கள் ஆகிவிட்டன. தற்போது, அந்த விசாரணையில் மேல்கட்ட நடவடிக்கைகள் இல்லை என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தனது தரப்பிற்கு கிடைத்துள்ள தகவல் கவலையளிப்பதாக அருண் கூறியுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆணையர் லத்தீஃபா கோயா, அவ்விவகாரம் குறித்து விசாரணையை மேற்கொள்ள சிறப்பு செயற்குழுவை அமைக்க வேண்டும். காரணம், ஆலயத்திற்கு சொந்தமான பணத்திலும் முறைகேடு நிகழ்ந்துள்ளது.
அவ்விவகாரம் குறித்து முழுமையான விசாரணையை மேற்கொள்ள வலியுறுத்தி 10,000 பேரிடமிருந்து கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அருண் கூறியதாக ஃப்.எம்.டி. செய்தி வெளியிட்டுள்ளது.


