Homeமலேசியாபத்து தீகாவில் சரக்கு தொடரி தடம் புரண்டது

பத்து தீகாவில் சரக்கு தொடரி தடம் புரண்டது

பத்து தீகா | பிப்பரவரி 27

சா ஆலாம் அருகே உள்ள பத்து தீகா பகுதியில் சரக்குத் தொடர் வண்டி தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியின் இருவழி தண்டவாளப் பாதையில் தடை ஏற்பட்டது.

பாடாங் பெசாரில் இருந்து கிள்ளான் வெ௶ச் போர்ட் துறைமுகத்திற்கு 50 கொல்கலன்களைக் கொண்டு சென்ற அந்த சரக்குத் தொடர் வண்டி கி.மி.20.041 இல் தடம் புரண்டு 11 கொல்கலன்கள் கவிழ்ந்தன. முன் இயந்திரத்துடன் எஞ்சிய 39 கொல்கலன்கள் தண்டவாளத்திலேயே இருந்தன.

இதன் காரணமாக சுபாங் ஜெயாவில் இருந்து பத்து தீகாவுக்குப் பயணிக்க எண்ணுகிறவர்கள் கேடிஎன்பி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள தற்காலிகப் பேருந்தில் செல்லலாம் என அந்நிறுவனம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

spot_img

latest articles

explore more