Homeகுற்றவியல்இணைய மோசடியில் சம்பந்தப்பட்ட 31 காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்படுவர்.

இணைய மோசடியில் சம்பந்தப்பட்ட 31 காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்படுவர்.

ஈப்போ | மார்ச் 1

மாக்காச் இணைய மோசடியில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அரச மலேசியக் காவல் படையில் அதிகாரிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவர்.

அவர்களுக்குத் தண்டனை கொடுக்கும் நடவடிக்கை தற்போது காவல் படை ஆணையத்திடம் ஒப்படைக்கபட்டுள்ளது என அரச மலேசியக் காவல்துறை தலைவர் அப்துல் ஹமிட் பாடோர் கூறினார்.

இதற்கு முன்னர் அவர்கள் ஸைடி கனாப்பியா @ எடி கண்ணா, அல்வின் கோ போன்ற மோசடி மன்னர்களுடன் தொடர்புள்ளவர்கள் என நம்பப்படுகிறவர்கள் ஆவர்.

ஒழுங்குமுறை, தரக் கட்டுப்பாடு இலாகாவின் விசாரனை முடிவு பெற்று தற்போது அதன் அறிக்கை உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின் தலைமையேற்றுள்ள காவல் படை ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளது என அவர் சொன்னர்.

மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வரும் பிரச்சனையாக இதனைக் கருதுவதாகவும் ஆகையால் மேலிடத்திற்கு அதனைக் கொண்டு சென்றிருப்பதாகவும் அப்து ஹமிட் பாடோர் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more