Homeஅரசியல்அம்னோ - பெர்சத்து உறவு முறிவு : அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பப்பட்டது !

அம்னோ – பெர்சத்து உறவு முறிவு : அதிகாரப்பூர்வக் கடிதம் அனுப்பப்பட்டது !

கோலாலம்பூர் | மார்ச் 3

பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை முறித்துக் கொள்வதாக அம்னோ அதிகாரப்பூர்வக் கடிதத்தை அனுப்பியுள்ளது.

எதிர்வரும் 15ஆம் பொதுத் தேர்தலின்போது அந்த ஒத்துழைப்புத் துண்டிக்கப்படும் அம்னோ உச்சமன்றத்தின் முடிவை பெர்சத்துவுக்குக் கடிதத்தின் வாயிலாக பிரதமர் தான் ஶ்ரீ முகிதீன் யாசினுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த பிப்பரவரி 26ஆம் நாள் அக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அம்னோவின் நம்பத்தகுந்த வட்டம் கூறியதாக ம்லேசியாகினி தகவல் வெளியிட்டுள்ளது.

அக்கடிதம் தொடர்பான எவ்வித பதில் (கடிதமும்) இதுவரை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கபடும் வரை அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கூட்டணிக்கு ஆதரவு வழங்குவார்கள்.

கடந்த சனவரி 9ஆம் நாள் அம்னோவின் உச்சமன்றக் கூட்டத்தில் இந்த தீர்மானத்தை முடிவு செய்திருந்தனர்.

இருந்தாலும், அந்த முடிவு சனவரி 31ஆம் நாள் பொதுக்கூட்டத்தில் அங்கீகாரம் பெற இருந்த வேளையில், நடமாட்டக் காட்டுப்பாட்டு ஆணையால் அது ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்தப்ம் பொதுத் தேர்தலில் பெர்சத்துவுடனான அம்னோவின் ஒத்துழைப்பு குறித்து முந்தைய அம்னோ / தே.மு. செயலாளர் அன்னுவார் மூசாவிடம் கேட்டபோது, அதனை அவரும் உறுதிப்படுத்தினார். மேலும், இந்த முடிவால் அம்னோ அடுத்தப் பொதுத் தேர்தலைத் தனித்து களமிறங்கும்போது அது தோல்வியை அடையக் கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more