Homeகுற்றவியல்SUKE மேம்பால விபத்து : கனவுந்து ஓட்டுநர் போதைப் பொருளைப் பயன்படுத்தி இருந்தார் !

SUKE மேம்பால விபத்து : கனவுந்து ஓட்டுநர் போதைப் பொருளைப் பயன்படுத்தி இருந்தார் !

பண்டார் தாசேக் செலாத்தான் | மார் 4

கனவுந்து மோதியதில் முழுதாய்க் கட்டி முடிக்கப்படாத மேம்பாலத்தின் இரும்புத் தூண் விழுந்து இரு உயிர்களைப் பறித்தச் சம்பவத்தின் தொடர்புடைய கனவுந்து ஓட்டுநர் போதைப் பொருளைப் பயன்படுத்தி இருந்தார் என மேல் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தத் தகவலை கோலாலம்பூர் புலனாய்வு – போக்குவரத்துத் துறையின் தலைவர் சுல்கிப்லி யாஹ்யா உறுதிப்படுத்தினார்.

டாங் வாங்கி காவல் நிலையத்தில் 40 வயது கொண்ட மலேசியரான அந்த ஆடவர் மீது மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் அது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

அவ்விபத்தில் எந்தக் காயத்துக்கும் உள்ளாகாத அந்த ஆடவரை தற்போது காவல்துறை தடுத்து வைத்துள்ளது.

spot_img

latest articles

explore more