Homeஅரசியல்தேசிய மீட்சி மன்றத்தில் இணைய எதிர்க்கட்சிகளுக்குப் பிரதமர் அழைப்பு !

தேசிய மீட்சி மன்றத்தில் இணைய எதிர்க்கட்சிகளுக்குப் பிரதமர் அழைப்பு !

கோலாலம்பூர் | 22/8/2021 :-

தொடர்ந்து கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுபடுத்த எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய மீட்சித் மன்றத்திலும் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் சிறப்புப் பணிக்குழுவிலும் இணைந்து பணியாற்ற எதிர்க்கட்சிகளுக்கு இடம் உண்டு எனக் கூறினார்.

மாமன்னரின் கட்டளைக்கு இணங்க அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டின் நன்மைக்காகவும் மக்களின் நலனுக்காகவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பினரும் ஒரே அணியில் இருந்து ஒன்றாக செயல்பட்டு நிலைமையை சரி செய்திருக்க வேண்டும். ஆனால், நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, அரசியல் நிலைத்தன்மையை உடனடியாக கொண்டு வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதோடு அரசியல் கட்சிகளைக் கடந்த ஒத்துழைப்பையும் நாட வேண்டும்.

எனவே, கோவிட்-19 ஐக் கட்டுப்படுத்த உருவாக்கப்படும் தேசிய மீட்சி மன்றத்திலும் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் சிறப்புப் பணிக்குழுவிலும் எதிர்க்கட்சித் தலைமைத்துவத்திற்கு இடமளிப்பதாக பிரதமர் இஸ்மாயில் தமதுரையில் குறிப்பிட்டார்.

நாட்டை சுகாதார, பொருளாதார அமன்டஹ் நிலையில் இருந்து மீட்டெடுக்கும் அமைச்சரவையைத் தாம் உருவாக்க இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

அவர் அமைக்க இருக்கும் அணி மக்களின் நம்பிக்கையைப் பெறுவார்கள் எனத் தாம் உறுதி அளிப்பதாகவும் பிரதமர் சொன்னார்.

spot_img

latest articles

explore more