Homeமலேசியாமுகமட் தாய்ப் வருகையால் அம்னோவிற்கு என்ன நன்மை?

முகமட் தாய்ப் வருகையால் அம்னோவிற்கு என்ன நன்மை?

பெட்டாலிங் ஜெயா, செப். 18-
அம்னோவிலிருந்து பிரிந்து சென்ற சிலாங்கூர் மாநில முன்னாள் மந்திரி புசார் டான்ஸ்ரீ முகமட் தாய்ப் கட்சிக்கு எவ்வாறு பங்காற்றப் போகிறார் என எனக்கு தெரியவில்லை என சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அம்னோவிலிருந்து பாஸ் கட்சிக்குச் சென்று, பின்னர் பிகேஆருக்குத் தாவி, அதன் பின்னர் மீண்டும் தாய்க் கட்சியான அம்னோவுக்கு முகமட் தாய்ப் திரும்பியுள்ளார். அவருக்குக் கோலாகலமான வரவேற்பு கொடுக்கப்பட்டிருப்பது உண்மைதான் என ஒப்புக் கொண்ட அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நஸ்ரி, அவர் அம்னோவில் என்ன செய்யப்போகிறார் என்பது உறுதியாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.

அது எனக்குத் தெரியாது. அவர்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டுமென நஸ்ரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முன்னாள் தலைவர்கள் திரும்பி வந்தாலும் வராவிட்டாலும் அம்னோவும் தேசிய முன்னணியும் அடுத்த தேர்தலுக்கு தயாராகவே உள்ளதாக நஸ்ரி குறிப்பிட்டார். கட்சிக்குப் பெரும் புள்ளிகளை அழைத்து வருவது முக்கியமல்ல. அதன் மூலம் மக்களின் மனதைக் கவர முடியுமா என்பதே முக்கியம் என நஸ்ரி குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more